17 ஜன., 2018

சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு... For youth - secret of success -

சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் ஆலோசனை

ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுடன் தமிழ் மேட்ரிமோனியின் நிறுவனர் திரு. முருகவேல் ஜானகிராமன் அவர்கள் கலந்துரையாடியபோது, "சாதிக்க நினைக்கும் இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் கூறுவது என்ன?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சத்குரு கூறும் இந்த பதில் அனைத்து இளைஞர்களுக்கும் நல்ல வழிகாட்டுதலாக இருக்கும். வீடியோ உங்களுக்காக...

எனது சொந்த அனுபவம் சத்குரு அவர்களின் சொற்பொழிவுகளை யூட்யூபில் பார்க்க/கேட்க சிந்தனையில் தெளிவு பிறக்கிறது. அவர்களது ஆழமான சிந்தனைகளும், தெளிவான பேச்சும் என்னை மிகவும் கவர்ந்தன.

நன்றி: யூட்யூப் மற்றும் ஈஷா யோகா ஃபவுண்டேஷன்

சிறுகதை நேரம்-1: ஜெயமோகன் அவர்களின் "சோற்றுக்கணக்கு"

ஜெயமோகன் அவர்களின் அறம் சிறுகதைத் தொகுப்பிலிருந்து ஒரு 

அற்புதமான சிறுகதை: சோற்றுக்கணக்கு,

நீங்கள் கேட்டு ரசிக்க.நன்றி : இலக்கியஒலி மற்றும் யூட்யூப் 

சிரித்து வாழவேண்டும்-1: டிப்ஸ்

ஹோட்டல்ல சாப்பிட்டு முடிச்சதும் சர்வர் டிப்ஸ் கேட்டாரு…

வெந்தயம் போட்டால் இட்லி மிருதுவாக இருக்கும்னு டிப்ஸ் கொடுத்தேன்.

நன்றி: f/alwzsmle

30 நவ., 2017

எனக்குப் பிடித்த கவிதை-78: கடல்...

கடல்...
உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.

வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜம்.

கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை.

நன்றி: தண்ணீர் தேசம், கவிஞர் வைரமுத்து


எனக்குப் பிடித்த இணையதளம்/வலைப்பூ,-2: க்ரியா

எனக்குப் பிடித்த இணையதளம்-2:

க்ரியா இணையதளத்தை www.crea.in என்ற முகவரியில் காணலாம்.

க்ரியாவின் இணையதளத்தில் உள்ள சொல்வங்கியில்  450,000 சொற்கள் இடம்பெற்றுள்ளன. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) 1992 பதிப்பை இலவசமாக இந்த இணையதளத்தில் புரட்டிப்பார்க்கலாம்.

திருக்குறள்-32: ஒழுக்கத்து நீத்தார் பெருமை...

இன்றைய குறள்

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு.

நெல்லையப்பன் கவிதைகள்-90:

 நெல்லையப்பன் கவிதைகள்

படிப்பினை
பிள்ளையாரப்பா ... 
புத்தகம் இல்லாம
எவ்வளவு நல்லாருக்கு!
இது இப்படியே இருந்தா
எவ்வளவு விசயம் கத்துக்கலாம்!

எங்க வாத்தியாருக்கு 
என்ன வெல்லாம் தெரியுமுன்னு
இப்பத்தான் தெரியுது!

இதையெல்லாம்
ஏன்  சொல்லித்தரல
இத்தனை நாளா?

சாதாவோ, சமச்சீரோ
இந்த ஒரு மாதம்
நாங்க படிச்சது
எந்த புத்தகத்திலுமில்ல.

புத்தகம் வந்தா
எங்க சந்தோசமெல்லாம்
காணாத பூடும்.

இப்ப  நான் கத்துக்கிட்டது 
புத்தகத்திற்கு வெளியேயும்
நிறைய படிக்கணும்.திருவருட்பா-6: துடிஎன்னும் இடைஅனம்...

தினம் ஒரு திருவருட்பா

துடிஎன்னும் இடைஅனம் பிடிஎன்னும் நடைமுகில்
துணைஎனும் பிணையல்அளகம்
சூதென்னும் முலைசெழுந் தாதென்னும் அலைபுனல்
சுழிஎன்ன மொழிசெய்உந்தி
வடிஎன்னும் விழிநிறையும் மதிஎன்னும் வதனம்என
மங்கையர்தம் அங்கம்உற்றே
மனம்என்னும் ஒருபாவி மயல்என்னும் அதுமேவி
மாள்கநான் வாழ்கஇந்தப்
படிஎன்னும் ஆசையைக் கடிஎன்ன என்சொல்இப்
படிஎன்ன அறியாதுநின்
படிஎன்ன என்மொழிப் படிஇன்ன வித்தைநீ
படிஎன்னும் என்செய்குவேன்
தடிதுன்னும் மதில்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே.

திருமந்திரம்-20: ஒக்க நின்றானை...

தினம் ஒரு திருமந்திரம்

ஒக்க நின்றானை உலப்பு இலி தேவர்கள்
நக்கன் என்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கம் நின்றார் அறியாத பரமனைப்
புக்கு நின்று உன்னியான் போற்றி செய்வேனே.


     இறைவனை நான் அணுகி இருந்து அநுதினமும் வழிபாடு செய்வேன்.உடனாய் நிற்பவன்; அழிவற்ற தேவர்கள் ஆடையற்றவன் எனப்பரவும் தலைவன். பக்கத்தில் உள்ள திருமால் முதலிய தேவர்கள் அறிய முடியாத மேலோன். இத்தகைய இறை வனை நான் அணுகி நின்று நாள் தோறும் வழிபடுவேன்.

திருப்புகழ்-5: திருப்புகழ் படிப்பவர் மனத்தினில் ...

தினம் ஒரு திருப்புகழ்

பொருப்பது பொடிப்பட விடுத்திடுகை வேலா
இருப்பிடம் உனக்கெது எனக்கரு ளியம்பாய்;
உருக்க நல் விழுக்குலம் ஒழுக்கமில ரேனும்

திருப்புகழ் படிப்பவர் மனத்தினில் இருப்பாம்.